குறள்
பெருமை பெருமிதம் இன்மை; சிறுமை
பெருமிதம் ஊர்ந்து விடல்
குறள் விளக்கம்
பெருமை எனப்படும் பண்பானது, தான் முன்பு செய்தவற்றை எண்ணிச் செருக்குக் கொள்ளாமல் இருத்தல். சிறுமை எனப்படுவது (உண்மையில் இல்லாதபோதும், தான் செயற்கரிய செய்ததாக எண்ணி) செருக்குக் கொண்டு அதன் எல்லையிலேயே நின்றுவிடுதலாகும்.