Kural

திருக்குறள் #939
குறள்
உடைசெல்வம் ஊண்ஒளி கல்விஎன்று ஐந்தும்
அடையாவாம் ஆயம் கொளின்
குறள் விளக்கம்
சூதாடுதலை (ஒருவன் விரும்பி)ச் செய்தால் புகழ் கல்வி செல்வம் உணவு உடை ஆகிய ஐந்தும் அவனை விட்டு நீங்கிவிடும்.