குறள்
வேண்டற்க வவென்றிடினும் சூதினை; வென்றதூஉம்
தூண்டீல்பொன் மீன்விழுங்கி யற்று
குறள் விளக்கம்
(ஒருவன்) வெல்லும் ஆற்றல் படைத்தவனாக இருந்தாலும் (பலவகைத் தீமைகளைக் கருத்தில்கொண்டு) சூதாடலை விரும்பாதிருக்க வேண்டும். (சூதில்) வென்ற பொருளும்கூட தூண்டிலில் உள்ள இரும்பை மீனானது இரையென எண்ணி விழுங்குவதற்கு ஒப்பானது.