குறள்
துஞ்சினார் செத்தாரின் வேறுஅல்லர் எஞ்ஞான்றும்
நஞ்சுஉண்பார் கள்உண் பவர்
குறள் விளக்கம்
உறங்கியவர் (அறிவு ஒடுஙியிருக்கும் காரணத்தால்) இறந்தவருக்கு வேறானவர் அல்லர். (அதைப்போன்றே) எப்பொழுதும் கள்ளை உண்பவர் (அறிவு மயங்குவதால்) நஞ்சைக் குடிப்பவருக்கு (வேறானவர் அல்லர்.)