Kural

திருக்குறள் #899
குறள்
ஏந்திய கொள்கையார் சீறின் இடைமுரிந்து
வேந்தனும் வேந்து கெடும்
குறள் விளக்கம்
அரிய தவ ஒழுக்கங்களைஏந்தி நிற்கும் இயல்பை உடைய சான்றோர் சினந்தால் இந்திர பதவியில் இருப்பவனும்கூட, அரச பதவியை இடையிலேயே இழந்து, தானும் அழிவான்.