Kural

திருக்குறள் #88
குறள்
பரிந்துஓம்பிப் பற்றற்றேம் என்பர் விருந்தோம்பி
வேள்வி தலைப்படா தார்
குறள் விளக்கம்
விருந்தினரை (நிலையில்லாத பொருள்களைக் கொண்டு) உபசரித்து, வேள்விப் பயனை அடைய விருப்பம் இல்லாத அறிவிலிகள் (அந்த நிலையில்லாத பொருளை) வருந்திப் பாதுகாத்து, (பிறகு அப்பொருளை இழந்து விட்டு) (இப்போது நாங்கள்) வாழ்க்கையில் பற்றுக்கோல் இல்லாதவர்கள் ஆயினோம் (எங்களைப் பாதுகாப்பதற்கு எதுவும் இல்லை, எவரும் இல்லை) என்று பின்னிரக்கம் கொண்டு வருந்துவர்.