Kural

திருக்குறள் #870
குறள்
கல்லான் வெகுளும் சிறுபொருள் எஞ்ஞான்றும்
ஒல்லானை ஒல்லாது ஒளி
குறள் விளக்கம்
பகைத்திறனைக் கல்லாதவனுடன் பகைமை கொள்ளுதலால் (கிடைக்கும்) எளிய பொருளை அடையாதவனை ஒருபொழுதும் புகழாகிய ஒளி அடையாது.