குறள்
இகல்என்னும் எவ்வநோய் நீக்கின் தவல்இல்லாத்
தாவில் விளக்கம் தரும்
குறள் விளக்கம்
(ஒருவன்) மாறுபாடு என்று சொல்லப்படுகின்ற துன்பத்தைக் (கொடுக்கின்ற) நோயை, தன் உள்ளத்திலிருந்து நீக்கிவிட்டால், (அவ்வாறு நீக்குதல்) அழிவில்லாத் நிலையான புகழைக் கொடுக்கும்.