குறள்
நாணாமை நாடாமை நாரின்மை யாதொன்றும்
பேணாமை பேதை தொழில்
குறள் விளக்கம்
(பழி பாவங்களாகிய, நாண் வேண்டியவற்றுக்கு) நாணாமல் இருத்தல்; (நாட வேண்டியவற்றைக் குறித்து) ஆராய்ந்து தேராமல் இருத்தல்; (யாவரிடத்தும்) அன்பின்றி, கடுஞ்சொற்களுடனும் வெறுப்புடன் கூடிய செயல்களுடனும் நடந்துகொள்ளுதல்; (பேணிக் காக்க வேண்டியவைகளுள், குடிப்பிறப்பின் சிறப்பு போன்ற) யாதொன்றையும் காக்காமல் இருத்தல் ஆகியவை அறிவிலியின் இயல்புகளாகும்.