Kural

திருக்குறள் #821
குறள்
சீரிடம் காணின் எறிதற்குப் பட்டடை
நேரா நிரந்தவர் நட்பு
குறள் விளக்கம்
உள்ளத்தில் நேர்மையான் அன்பின்றி, தம்முடைய காரியம் நிறைவேறும்வரை, புறத்தில் மட்டும் அன்புடன் பழகுவரின் நட்பானது தகுந்த இடம் வாய்க்கும்போது, உலோகங்களை அறுப்பதற்கு ஆதாரமாகப் பயன்படும் கருவியாகிய உலைகளப் பட்டடைக்கல்லைப்போல, தீமையையே தரும்.