குறள்
மருவுக மாசற்றார் கேண்மை; ஒன்று ஈத்து
ஒருவுக ஒப்பிலார் நட்பு
குறள் விளக்கம்
உயர்ந்தோரின் ஒழுக்கத்தினோடு ஒத்துப்போகக்கூடிய குற்றம் இல்லாதவரின் நட்பினையே ஏற்றுக் கொள்ளவேண்டும். உயர்ந்தோரின் பண்புடன் ஒத்துப் போகாதவரது நட்பினை அறியாமல் ஏற்றுக் கொண்டு விட்டால் அவர் விரும்பிய ஒன்றைக் கொடுத்தாவது அந்நட்பினை கைவிட வேண்டும்.