Kural

திருக்குறள் #799
குறள்
கெடுங்காலைக் கைவிடுவார் கேண்மை அடும்காலை
உள்ளினும் உள்ளம் சுடும்
குறள் விளக்கம்
ஒருவன் நன்றாக இருக்கும் காலத்தில் அவனுடனிருந்துவிட்டு அவன் கெட்டுப்போகின்ற காலத்தில் அவனை விட்டுவிட்டு நீங்குகின்றவரிடம் செய்துகொண்ட பழைய நட்பினை எமன் தனது உயிரை எடுக்க வரும் காலத்தில் நினைத்துப் பார்த்தாலும் அந்த பழைய நட்பு அவன் மனதைச் சுட்டுப் பொசுக்கும்.