குறள்
செய்க பொருளைச் செறுநர் செறுக்கறுக்கும்
எஃகுஅதனின் கூரியது இல்
குறள் விளக்கம்
தான் ஒன்றைச் சேர்க்க வேண்டும் என்று எண்ணுபவர் பொருட் செல்வத்தைச் சேர்க்க வேண்டும். அச்செல்வமானது தன்னுடைய பகைவரினுடைய செருக்கினை அழிக்கக்கூடிய ஆயுதமாகும். அச்செல்வத்தைப் போல கூர்மையுடைய ஆயுதமானது வேறு எதுவும் இல்லை.