Kural

திருக்குறள் #745
குறள்
கொளற்குஅரியதாய்க் கொண்டகூழ்த் தாகி அகத்தார்
நிலைக்குஎளிதாம் நீரது அரண்
குறள் விளக்கம்
பகைவரால் கைப்பற்றுவதற்கு அரியதாகவும் பலவகையான உணவுப் பொருள்களைத் தன்னிடத்தே உடையதாகவும் உள்ளே இருப்போர்கள் போருக்கு நிலைத்து நிற்பதற்கு எளிதான தன்மை உடையதாகவும் உள்ளதே அரணாகும்.