குறள்
உயர்வுஅகலம் திண்மை அருமைஇந் நான்கின்
அமைவுஅரண் என்றுஉரைக்கும் நூல்
குறள் விளக்கம்
உயர்ந்ததும் அகலமானதும் உறுதியானதும் பகைவர் அணுகாத அருமையான எந்திரங்கள் உடையதும் ஆகிய இந்த நான்கும் அமைந்த மதிலை உடையது அரசரால் உருவாக்கப்பட்ட அரண் என்று அரசியலைப் பற்றிய நூலை அறிந்தோர் கூறுவார்கள்.