குறள்
கேடுஅறியாக் கெட்ட இடத்தும் வளங்குன்றா
நாடுஎன்ப நாட்டின் தலை
குறள் விளக்கம்
பகைவர்களால் கெடுதல் என்பதனை அறியாததாகவும் அரிதாக ஏதோ ஒரு காரணத்தால் கேடு வந்த பொழுதிலும் தன்னுடைய வளத்தில் குறையாத நாடுதான் மற்ற எல்லா நாடுகளிலும் தலைசிறந்த நாடு என்று அறிஞர்கள் சொல்லுவார்கள்.