Kural

திருக்குறள் #698
குறள்
இளையர் இனமுறையர் என்றுஇகழார் நின்ற
ஒளியோடு ஒழுகப் படும்
குறள் விளக்கம்
அரசர் தம்மைக் காட்டிலும் வயதில் இளையவர் என்றோ எனக்கு இவ்வகை உறவினர் என்றோ நினைத்து அவரை அவமதிக்காமல் அவரிடத்தில் நிலைபெற்று அமைந்துள்ள புகழுக்கு ஏற்றவாறு நடந்து கொள்ள வேண்டும்.