Kural

திருக்குறள் #695
குறள்
எப்பொருளும் ஓரார் தொடரார்மற்று அப்பொருளை
விட்டக்கால் கேட்க மறை
குறள் விளக்கம்
அரசன் ஒருவரிடம் இரகசியமாகப் பேசிக் கொண்டிருக்கும்போது அதனுடைய எந்த இரகசியப் பொருளையும் அறியும் நோக்கோடு உற்றுக் கேட்காமலும் பிறகு அவனைத் தொடர்ந்து வினவாமலும் அந்த இரகசியப் பொருளை அரசரே அவராகச் சொன்னால் மட்டுமே கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும்.