Kural

திருக்குறள் #692
குறள்
மன்னர் விழைய விழையாமை மன்னரால்
மன்னிய ஆக்கம் தரும்
குறள் விளக்கம்
தம்முடைய அரசர் விரும்பி அனுபவிக்கக் கூடியவற்றை தாம் விரும்பாமலிருந்தால் அது அவர்களுக்கு அவ்வரசரின் வாயிலாக நிலையான செல்வங்களைக் கொடுக்கும்.