குறள்
இறுதி பயப்பினும் எஞ்சாது இறைவற்கு
உறுதி பயப்பதாம் தூது
குறள் விளக்கம்
வேற்று வேந்தனிடம் சொல்லும் வார்த்தை தன்னுயிருக்கு முடிவைத் தருவதாயிருந்தாலும் அதற்கு சிறிதும் அஞ்சாமல் தன்னரசருக்கு மேன்மை தருவதை உறுதிபடத் தன்னரசன் சொல்லியதைச் சொல்பவனே தூதுவனாவான்.