Kural

திருக்குறள் #680
குறள்
உறைசிறியார் உள்நடுங்கல் அஞ்சிக் குறைபெறின்
கொள்வர் பெரியார்ப் பணிந்து
குறள் விளக்கம்
வலிமை குறைந்தவர் தம்மை விட வலிமை உடையவர்கள் எதிர்க்கும் போது தம்மைச் சேர்ந்தவர்கள் நடுங்குவதை அறிந்து தானும் அஞ்சி மற்றவர்கள் தம்மைக் குறை கூறினாலும் அதற்குரிய பலன் கிடைக்குமாயின் தம்மினும் வலிமை மிக்கவரைப் பணிந்து ஏற்றுக் கொள்வர். வலிமை குறைந்தவர் அச்சத்துடனும் நடுக்கத்துடனும் தமது குறைகளைக் கூறி வலிமையான பெரியவரைப் பணிந்தால் அவ்வலிய பெரியோர் ஏற்றுக்கொள்வர் என்னும் பொருளும் கூறுவதுண்டு.