குறள்
கடைக்கொட்கச் செய்தக்கது ஆண்மை இடைக்கொட்கின்
எற்றா விழுமம் தரும்
குறள் விளக்கம்
செய்கின்ற செயலைச், செயலின் முடிவில் வெளிப்படும் படியாக, அதற்கு முன்பு மறைத்துச் செய்யும் தன்மையே வலிவானதாகும். அவ்வாறில்லாமல் அச்செயலின் இடையிலே வெளிப்பறும் படியாகச் செய்தால் அது அச்செயலைச் செய்பவனுக்கு நீங்காத துயரத்தைக் கொடுக்கும்.