குறள்
வெள்ளத்து அனைய இடும்பை அறிவுடையான்
உள்ளத்தின் உள்ளக் கெடும்
குறள் விளக்கம்
வாழ்க்கையின் இருமைத் தன்மைகளை ஆராய்ந்து தெளிந்த அறிவை உடையவன், ஊக்கத்தின் துணைகொண்டு இடையூறுகளை நீக்க முயலும் பொழுது கரைகாண முடியாத வெள்ளத்தைப் போன்ற துன்பங்கள் அனைத்தும் அறிவு, ஊக்கம், முயற்சி ஆகியவற்றால் அழிந்தே விடும்.