குறள்
இடுக்கண் வருங்கால் நகுக அதனை
அடுத்துஊர்வது அஃதுஒப்பது இல்
குறள் விளக்கம்
செயல்புரியும்போது இடையூறு அல்லது துன்பம் வருமானால் அதற்காக வருந்தாமல், அறிவால் இயற்கை நியதியை உணர்ந்து மகிழ்க. அவ்விடையூறு அல்லது துன்பத்தை எதிர்த்து அதனைக் கடப்பதற்கு அதற்கு (துன்பத்தையே இன்பமாகக் கருதி மகிழ்வதற்கு) நிகரானது எதுவுமில்லை.