குறள்
பொறிஇன்மை யார்க்கும் பழிஅன்று அறிவுஅறிந்து
ஆள்வினை இன்மை பழி
குறள் விளக்கம்
முன் செய்த நல்வினைப் பயன் இன்மை எவருக்கும் குறையாக அல்லது குற்றமாகக் கருதப்படாது. அறியப்பட வேண்டியதை (முயன்று) அறிந்து முயற்சியுடன் செயல்புரியாமல் சோம்பியிருக்கும் தன்மையே குற்றமாகவும் குறையாகவும் கருதப்படும்.