Kural

திருக்குறள் #586
குறள்
துறந்தார் படிவத்தர் ஆகி இறந்துஆராய்ந்து
என்செயினும் சோர்வுஇலது ஒற்று
குறள் விளக்கம்
முற்றுந்துறந்த துறவிபோன்றும், யாத்திரை முதலான விரதங்களைக் கடைப்பிடிப்பவர் போன்றும், எளிதில் செல்லமுடியாத இடங்களுக்குச் சென்றும், ஆராயவேண்டியவற்றை ஆராய்ந்தறிந்து, அந்த இடத்தைச் சேர்ந்தவர் சந்தேகித்துப் பிடித்து என்ன சித்திரவதைத் துன்பங்களைத் தந்தாலும் தன்னை இன்னாரென்று காட்டிக்கொடுக்காதவனே ஒற்றனாவான்.