குறள்
செய்வானை நாடி வினைநாடிக் காலத்தோடு
எய்த உணர்ந்து செயல்
குறள் விளக்கம்
செயல்புரிபவனின் இலக்கணத்தை ஆராய்ந்து செய்யப்படும்செயலின் இயல்பை ஆராய்ந்து, செயல்புரிவனையும், செயலையும் தகுந்த நேரத்துடன் இணைத்துப் பொருந்தும்படி அறிந்து செயல்புரிபவனைச் செயலாற்றச் செய்ய வேண்டும்.