Kural

திருக்குறள் #508
குறள்
தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறை
தீரா இடும்பை தரும்
குறள் விளக்கம்
தன்னுடன் தொடர்பற்றவனை ஆராயாமல் தேர்ந்தெடுத்தால் தலைமைப் பரம்பரைக்கே தீராத (நீக்குவதற்குக் கடினமான) துன்பத்தைத் தரும்.