Kural

திருக்குறள் #495
குறள்
நெடும்புனலுள் வெல்லும் முதலை; அடும்புனலின்
நீங்கின் அதனைப் பிற
குறள் விளக்கம்
முதலையானது ஆழமுடைய தண்ணீரில் மற்ற உயிரினங்களை வெற்றிகொள்ளும். அந்த நீரைவிட்டு விலகுமானால் (கரைக்கு வருமானால்) அம்முதலையை மற்ற உயிரினங்கள் வெற்றிகொண்டுவிடும்.