Kural

திருக்குறள் #478
குறள்
ஆகுஆறு அளவுஇட்டிது ஆயினும் கேடுஇல்லை
போகுஆறு அகலாக் கடை
குறள் விளக்கம்
பொருள் போகும் வழி அளவு (செலவு) விரியாமல் இருக்குமானால் பொருள் வரும் வழி அளவு (வரவு) சிறிதாக இருந்த போதிலும் அதனால் யாதொரு கெடுதலும் இல்லை.