குறள்
அளவுஅறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல
இல்லாகித் தோன்றாக் கெடும்
குறள் விளக்கம்
தன்னிடத்துள்ள பொருளின் அளவை அறிந்து வாழாதவனுடைய வாழ்வானது மேலேழுந்தவாரியாகப் பார்த்தால் இருப்பதுபோலத் தோன்றி ஆழமாகப் பார்த்தால் இல்லாததாய் பிறகு அத்தோற்றமும் அழிந்துவிடும்.