Kural

திருக்குறள் #467
குறள்
எண்ணித் துணிக கருமம்; துணிந்த பின்
எண்ணுவம் என்பது இழுக்கு
குறள் விளக்கம்
ஒரு செயலைத் தொடங்கிய பிறகு வழிமுறையை ஆராய்தலென்பது குறைபாடுடையதாகிவிடும். எனவே செய்து முடிக்கும் வழிமுறையை ஆராய்ந்து செயலைத் தொடங்க வேண்டும்.