Kural

திருக்குறள் #465
குறள்
வகையறச் சூழாது எழுதல் பகைவரைப்
பாத்திப் படுப்பதோர் ஆறு
குறள் விளக்கம்
ஒரு போர்ச் செயலைச் செய்தால் ஏற்படும் வகைகளை விளைவுகளின் வரிசையை எல்லாம் முழுமையாக ஆராய்ந்து பார்க்காமல் அரைகுறையாகச் சிந்தித்துவிட்டு உணர்ச்சிவசப்பட்டுப் போருக்குச் செல்லுதல் எதிராளியை பயிர் வளர்ப்பதற்காக பாத்திகட்டி நீரை வருவித்துச் சேர்ப்பது போன்று தானே வழிவகுத்துக்கொடுத்து அழிவைத் தேடிக்கொள்வதற்கொப்பாகும்.