குறள்
தம்மின் பெரியார் தமரா ஒழுகுதல்
வன்மையுள் எல்லாம் தலை
குறள் விளக்கம்
அறிவு, ஒழுக்கம் அநுபவம் ஆகியவைகளினால் தன்னைக் காட்டிலும் பெரியவராக இருப்பவரைத் தமக்குச் சிறந்தவராக முக்கியமானவராக ஏற்று அவர் காட்டும் வழியில் நடந்துகொள்ளுதல் அனைத்து வலிமைகளிலும் மேலான வலிமையாக அமையும்.