குறள்
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு
குறள் விளக்கம்
ஏதேனும் ஒரு பொருளை (விஷயத்தை) எவர்சொல்லிக் கேட்டாலும் அந்தப் பொருளின் (விஷயத்தின்) உண்மையான பயனை புரிந்துகொள்ள வல்லமையுடையதாக அறிவு அமைய (பண்படுத்தப்பட) வேண்டும்.