குறள்
பிழைத்துஉணர்ந்தும் பேதைமை சொல்லார் இழைத்துணர்ந்து
ஈண்டிய கேள்வி யவர்
குறள் விளக்கம்
அறிவுக் கருவியை நன்கு பண்படுத்தி (தனது சிந்திக்கும் ஆற்றலால்) நூலின் பொருள்களை நுட்பமாக ஆராய்ந்து (மேலும்) அறிஞர்களின் நிறைந்த சொற்களைக் கேட்டவர் (நூலின் கருத்துக்களை) ஒருவேளை தவறாகப் புரிந்துகொண்டாலும் அறியாமையை (வளர்க்கும் சொற்களைச்) சொல்லமாட்டார்.