Kural

திருக்குறள் #384
குறள்
அறன்இழுக்காது அல்லவை நீக்கி மறன்இழுக்கா
மானம் உடையது அரசு
குறள் விளக்கம்
தனக்குரிய பொது – சிறப்பு அறக்கடமைகளில் தவறாது செயல்பட்டு அறமல்லாதவற்றை (தன்னிடத்தும், தான் ஆளுகின்ற குடிமக்களிடத்தும் உருவாகாதவண்ணம்) நீங்கச்செய்து வீரத்திலிருந்து தவறாத பெருமையை உடையவனாக (இருப்பவனே) அரசன் (ஆவான்).