Kural

திருக்குறள் #382
குறள்
அஞ்சாமை ஈகை அறிவுஊக்கம் இந்நான்கும்
எஞ்சாமை வேந்தற்கு இயல்பு
குறள் விளக்கம்
எச்சூழ்நிலையிலும் கலங்காத நெஞ்சுரம், தக்கார்க்கு வழங்கும் ஈகைப் பண்பு, நுண்மையான பகுத்தறிவு, சோர்வின்றி வினையாற்றும் ஊக்கப்பண்பு எனப்படும். இந்நான்கு பண்புகளும் இடைவிடாது ஒருங்கே நிலைத்திருத்தல் அரசனுக்கு இயல்பாயமைய வேண்டியதாகும்.