Kural

திருக்குறள் #371
குறள்
ஆகுஊழால் தோன்றும் அசைவின்மை; கைப்பொருள்
போகுஊழால் தோன்றும் மடி
குறள் விளக்கம்
(ஒருவனுக்கு) கைப்பொருளை இன்பத்தை ஆக்கித்தரும் ஊழால் (முன்செய்த நல்வினைப்பயன் வெளிப்படும்பொழுது) தளராத முயற்சி உண்டாகும். இன்பத்தைப் போக்கிவிடும் ஊழால் (முன் செய்த தீய வினைப்பயன் வெளிப்படும்பொழுது) சோம்பல் உண்டாகும்.