Kural

திருக்குறள் #370
குறள்
ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே
பேரா இயற்கை தரும்
குறள் விளக்கம்
ஒருபோதும் நிறைவு பெறாத இயல்புடைய ஆசையை ஒருவன் அழித்து விடுவானேயானால், ஆசை இல்லா அந்நிலையே, உயிரை விட்டுப் பிரிக்க இயலாத பேரின்ப இயல்பை உணர்த்தும்.