குறள்
அஞ்சுவது ஓரும் அறனே; ஒருவனை
வஞ்சிப்பது ஓரும் அவா
குறள் விளக்கம்
நிலையாமை, துறவு, மெய்யுணர்தல் வரை அனைத்தையும் பெற்று முக்தி நிலை பெறுவதற்குரியவன், மெய்ப்பொருளை ஆழ்ந்து மனதில் நிலை நிறுத்தாமலிருந்தால் அவனை மீண்டும் பிறவியில் ஆழ்த்துவது ஆசையாகும். எனவே ஆசைக்கு அச்சப்பட்டு, தன்னைக் காத்துக்கொள்வதே முழுமையான பயனைத்தரும் துறவறமாகும்.