குறள்
சார்புஉணர்ந்து சார்பு கெடஒழுகின் மற்றழித்துச்
சார்தரா சார்தரும் நோய்
குறள் விளக்கம்
(ஒருவன் அனைத்துப் பொய்ப்பொருட்களும்) சார்ந்திருக்கும் மெய்ப்பொருளை நன்கு அறிந்து (அவ்வறிவால் யான் எனது எனும்) இருவகை அகப்புறப்பற்றுக்களை முற்றிலும் அழித்து மெய்யறிவிலே நிலைத்து நின்றால், அது மீண்டும் மீண்டும் உயிரைச் சாரும் பிறவி நோயை (உடல்களில் தொடர்ந்து மாறி மாறிப் புகுதலை) அழித்து(விடும்). மீண்டும் சார்ந்திருக்கும் நிலையே ஏற்படாது.