குறள்
எப்பொருள் எத்தன்மைத்து ஆயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு
குறள் விளக்கம்
எந்தப் பொருள் (ஐம்பொறிகள் வாயிலாக மனதிற்கு) எந்தத் தன்மையுடையதாகத் தோற்றமளித்தாலும் அந்தப்பொருளைத் தூய அறிவின் துணைகொண்டு, மெய்யான பரம்பொருளாகவே உணர்ந்துகொள்வதுதான் அறிவாகும். (அறிவுச் சிறப்புமிக்க மனித உடலில் வாழும் உயிருக்கு பிறவிப் பயனாகும்.)