Kural

திருக்குறள் #350
குறள்
பற்றுக பற்றற்றான் பற்றினை; அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு
குறள் விளக்கம்
(அனைத்துப் பொருள்களிலும் நிறைந்திருந்தபோதிலும்) அவைகளில் சிறிதும் பற்றற்றிருக்கும் இறைவன் (அருளிய) மெய்யுணரும் நெறியை (முறைப்படி) பற்றிக் கொள்க (கடைப்பிடிக்க வேண்டும்). (உயிருக்கு அறியாமையால் தொடர்ந்து வந்த பிறவிப்) பற்று நீங்குவதற்காக அந்த மெய்யுணர்வு ந்றிப் பற்றுதலைப் பற்றி நிற்க வேண்டும்.