குறள்
பற்றற்ற கண்ணே பிறப்புஅறுக்கும்; மற்று
நிலையாமை காணப் படும்
குறள் விளக்கம்
(யான், எனது எனும் இருவகைப்) பற்றுக்களும் நீங்கிய உடனேயே (உயிரின்) பிறப்புத்தொடர் அறுந்துவிடும் (அழியும்). அந்த இருவகைப் பற்றுக்கள் நீங்கவில்லையானால் (இருவகைப்பற்றினால் தோன்றி மறையும்) நிலையற்ற (உயிர், உடலைச் சார்ந்து வாழும்) பிறப்பு இறப்புத் தொடரானது தொடரும் என்று அறிந்து கொள்ளப்பட வேண்டும்.