Kural

திருக்குறள் #333
குறள்
அற்கா இயல்பிற்றுச் செல்வம்; அதுபெற்றால்
அற்குப ஆங்கே செயல்
குறள் விளக்கம்
எவ்வகைச் செல்வமாயினும் அது நிலையில்லாத இயல்பை உடையது. அச்செல்வத்தைப் பெறுவாயேயானால் அப்பொழுதே காலந்தாழ்த்தாமல் அச்செல்வத்தைக் கொண்டு நிலையான வீடுபேற்றைப் பெறுவதற்குக் காரணமான அறச்செயல்களைச் செய்துவிட வேண்டும்.