குறள்
கூத்தாட்டு அவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம்;
போக்கும் அதுவிளிந் தற்று
குறள் விளக்கம்
ஒருவனிடத்தில் பெரிய அளவில் வரும் செல்வமானது நாடகம் நடைபெறுகின்ற அரங்கத்திற்கு மக்கள் கூட்டம் வருவது போல் சிறுகச் சிறுக வந்து சேரும். அச்செல்வம் போவது எப்படியெனின் அம்மக்கள் கூட்டம் ஒரே நேரத்தில் கலைந்து செல்வதைப் போன்றதாகும்.