குறள்
அறத்தின்ஊஉங்கு ஆக்கமும் இல்லை; அதனை
மறத்தலின் ஊங்குஇல்லை கேடு
குறள் விளக்கம்
புண்ணியச் செயல்களைக் காட்டிலும் மேலான இன்பத்தைக ஆக்கித் தருவது வேறு எதுவும் இல்லை. அப்புண்ணியச் செயல்களை (அறியாமையாலும் கவனக்குறைவாலும், சோம்பேறித்தனத்தாலும், மதிக்காமல், ஏற்றுக் கொள்ளாமல், பொருட்படுத்தாமல்) மறந்து விடுவதைக் காட்டிலும் மேலான துன்பத்தை உருவாக்குவது, கெடுதல் தருவது வேறு எதுவும் இல்லவே இல்லை.