குறள்
சிறப்புஈனும்; செல்வமும் ஈனும்; அறத்தின்ஊஉங்கு
ஆக்கம் எவனோ உயிர்க்கு?
குறள் விளக்கம்
நற்செயல்கள் முக்தியை வழங்கியே தீரும். உலக வாழ்க்கைக்குத் தேவையான பொருள்களையும் குறைவில்லாது வழங்கியே தீரும். எனவே, மனித உடல்களை எடுத்த உயிர்களுக்கு நற்செயல்களைவிட மேலான நன்மையை அளிப்பது, நன்மையை ஆக்கித் தருவது வேறு என்ன இருக்கிறது? (வேறு எதுவும் இல்லை என்பது கருத்து).