குறள்
செல்லா இடத்துச் சினம்தீது; செல்லிடத்தும்
இல்அதனின் தீய பிற
குறள் விளக்கம்
தன்னைக் காட்டிலும் வலிமையுடையவரைக் குறித்து ஒருவனுடைய கோபமானது, அது அவனுக்கு மிகுந்த கெடுதலை உண்டாக்கித் துயர் தரும். தன்னைக் காட்டிலும் வலிமை குறைந்தவரிடம் தோன்றினாலும் அந்தக் கோபத்தைக் காட்டிலும் அவனுக்கு வேறு துன்பம் தரும் தீங்கு இருக்கப் போவதில்லை.